தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா காமராசர் வழிகாட்டுதலோடு திருவாரூர் தெற்கு ஒன்றியம் பி கே யு மணிகண்டன் முன்னிலையில் வடகரை ஊராட்சிப் பகுதியில் இருந்து சி.பி.எம் கட்சியில் இருந்து விலகி 11 குடும்பங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் தங்களை அதிமுக வில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின் போது திருமதி .ஆச்சியம்மாள் தலைமையில் கே. ஜெயராமன், ஜெ.ராமலிங்கம் ,ஜெ அமிர்தவல்லி, ஆர். பூபதி, ஆர். அழகேசன், ஆர்.விஜய்பாபு, ஜெ.கலையரசி, எம். வளர்மதி , வி.பவித்ரா, ஆர்.விஜய், ஆர்.விஜிலா மற்றும் அதிமுக ஒன்றிய உறுப்பினர் ஜோதிபாசு, ஊராட்சி மன்ற தலைவர் ரகுராமன், வார்டு உறுப்பினர் சரவணன், உத்தண்ட ராஜன், திரவியம், கணேசமூர்த்தி மற்றும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.




















