கிருஷ்ணகிரி, ஆக 5 –
கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சார்பில் இன்று தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அதன் தலைவர் எஸ்.கே. ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் சி.முருகேசன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி நிவாரண நிதிக்காக ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்கள். அதனைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் பத்திரிக்கை யாளர்கள் சமூகப் பொறுப்போடு அவர்கள் இந் நற் செயலுக்கு தங்களது பங்களிப்பை அளித்தமைக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.