காஞ்சிபுரம், மார்ச். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) ஆறு சட்டமன்றத் தொகுதி தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.. இந்நிலையில் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவராவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிவித்து முதல் முறையாக காஞ்சிபுரம் வருகை தந்த வேட்பாளர் ராஜசேகருக்கு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் வெடி வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்று அங்குள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு அதிமுக கட்சியினரோடு ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்பு நகரின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக வந்து ரயில்வே சாலையில்  உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் சங்கரமடம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு வழியெங்கும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

பின் செய்தியாளர் சந்தித்த அதிமுக வேட்பாளர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மக்களிடம் நேரடியாக சென்று அவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து வெற்றி பெற்ற பின் அதனை தீர்க்க அயராது உழைப்பேன் என பேட்டியளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here