திருவாரூர், ஆக. 15 –
திருவாரூர் பாஜக சார்பில் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற தேச பிரிவினை யின் சோக வரலாறு என்ற தலைப்பில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 1947 ஆம் ஆண்டு தேசப்பிரிவினையின் போது என்னென்ன துன்பங்கள் மக்களுக்கு நடந்தது. என்பது உள்ளிட்ட அனைத்துக் கருத்துக்கள் குறித்து அக்கருத்தரங்கில் பங்கேற்றவர் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும், நமது நாட்டிற்க்காக காங்கிரஸ் கட்சி அந் நாள் முதல் இந் நாள் வரை எவ்வித துரோகங்களை விளைவித்தனர் எனவும், மாஃப்ளா (மலப்புரம்) கலவரம் காஷ்மீர் பிரச்சினை கச்சத்தீவு பிரச்சினைகள் குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் மாவட்ட பொதுச் செயலாளர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வருகைப் புரிந்த தஞ்சை விபாக் பிரச்சாரக் குழு முத்துக்குமார் சிறப்புரையாற்றினார்.
மேலிட பார்வையாளர் பேட்டை .சிவா, மாவட்ட பொதுச் செயலாளர் வி. கே. செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன், மாவட்ட பொருளாளர் அக்ஷ்யா முருகேசன், மாவட்ட துணை தலைவர் மணிமேகலை, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கழுகு. சங்கர், கல்வியாளர் பிரிவு சிவா, நகர தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் நன்றி உரை நிகழ்த்தினார்.






















