திருவண்ணாமலை, செப்.23 –
திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.சேகர், மாவட்ட பொருளாளர் டி.துரைமுருகன், மாவட்ட இணை செயலாளர் எம்.பிரபாகர், மாவட்ட அமைப்பு செயலாளர் கே.பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் என்.வி.முருகன், செயல் தலைவர் பி.தங்கவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.வி.சஜிதகுமார், மாநில அமைப்பு செயலாளர் எஸ்.சாமி, மாநில செயலாளர்கள் டி.சங்கர், எம்.சிவக்குமார், என்.உதயகுமார், எம்.விஷ்ணு, வழக்கறிஞர் ஜே.மோகன்ராஜ், மாநில துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், மாநில துணை செயலாளர் கே.சாதிக்பாஷா, மாநில துணை ஒருங்கிணைப்பாளர் வி.மோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில சிறப்பு தலைவர் கே.பாரதி, மாநில பொதுச் செயலாளர் கே.குமார், மாநில பொருளாளர் கே.ராமகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் ஏ.எஸ்.முருகன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இஎஸ்ஐ திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26ஆயிரம் உறுதிபடுத்த வேண்டும். அனைத்து கடைகளுக்கும் அடிப்படை வசதி செய்து தர வேண்டும். பணிநேரத்தில் மதுபாட்டில்களை கையாளும்போது ஏற்படும் இழப்பிற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கிட வேண்டும்.
காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.