கும்பகோணம், டிச. 27 –
கும்பகோணத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை வழங்க கோரி கோரிக்கை மனுக்களை உழவர்கள் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் வழங்கினார்கள்.
கும்பகோணம் அருகே உடையாளூர் ஆன்டிதோப்பு பகுதிகளில் வெப்பச்சலன மழை, அதைத் தொடரும் வடகிழக்குப் பருவமழை என்று தொடர்ந்து மழை பெய்து பூமி குளிர்ந்து கிடந்தாலும் கூட உள்ளம் கொதித்துப் போய் இருக்கின்றனர் டெல்டா விவசாயிகள்.
அவர்களின் கொதிப்புக்குக் காரணம் அவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதுதான் கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை தீபாவளிக்கும் வந்துவிடும் என்று தெரிவித்திருந்த நிலையில் இதுவரை பயிர் காப்பீடு தொகை வரவில்லை பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்கக்கோரி உடையாளூர் ஆண்டிதோப்பு அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுமார் 2 கோடிக்கு மேல் பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று விவசாயி சாமிநாதன் தலைமையில் விவசாயிகள் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

















