ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தொகுதி மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மக்கள் பணியில் தனிதன்மையுடன் செயல்பட்டு வருகிறது. கல்வி உதவி, மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுதல், அரசியலில் ஏற்படும் மாற்றங்களில் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுதல் போன்ற சமுதாய சிந்தனையுடன் கட்சி சேவை செய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மக்கள் செல்வாக்கை அமோகமாக பெற்று வருகிறது. இதனால் இக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கட்சியின் வளர்ச்சி தீவிரமடைவதை தொடர்ந்து தற்போது எஸ்டிபிஐ கட்சியினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்றம் வாரியாக கட்சி நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி மக்களின் தேவைகள், பிரச்னைகளை உள்ளூர் பிரமுகர்கள் மூலம் அறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக ராமநாதபுரம் சட்டமன்றம் தொகுதியை சேர்ந்த பெரியபட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் அசன்அலி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மதுரை புறநகர் தலைவர் ஜியாவுதீன், மாநில பேச்சாளர் அஸ்கர் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். தொகுதி துணைத்தலைவர் அபுபக்கர் சித்திக் கூட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கூட்டத்தில் பெரியபட்டிணத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் சிலர் பங்கேற்று பெரியபட்டிணம் மற்றும் தொகுதி முன்னேற்றம் குறித்து பேசினர். தொகுதி செயற்குழு உறுப்பினர் அபுலா நன்றி தெரிவித்தார்.
இதேபோல் ராமநாதபுரம் நகரில் தொகுதி நலன் குறித்து எஸ்டிபிஐ கட்சியின் நகர் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நகர் தலைவர் அப்துல்ஜமீல் தலைமையில் நடந்தது. இதில் ராமநாதபுரத்தில் நடைபெற வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் சேவை குறித்தும், மக்களின் நலன் காப்பதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் பேசப்பட்டது. செய்தி தொடர்பாளர் ஹமீது இப்ராகிம் நன்றி கூறினார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் தொகுதி மேம்பாடு குறித்து கலந்தாய்வு