திருவண்ணாமலை அக்.16-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை, மாலை மற்றும் இரவு வேலைகளில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது.
தொடர் கன மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து பல ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை வேங்கிக்கால், நொச்சிமலை, ஏந்தல், பெருமாள் நகர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி தனது முழு கொள்ளளவை தொடர்ந்து 2ம் ஆண்டாக எட்டியுள்ளது. ஏரி நிறைந்து ஏரி நீர் மதகு வழியாக தண்ணீர் அருவி போல் பாய்ந்தோடிகிறது. தொடர்ந்து 2ம் ஆண்டாக ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதையடுத்து. வேங்கிக்கால் பகுதியில் வசிக்கும் 2000 குடும்பங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வேங்கிக்கால் ஏரி கோடி போனதை அடுத்து வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பூஜை செய்து தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். மேலும் மக்களின் வழியே நீர் நிரம்பி வழிந்தோடி வருவதில் பொதுமக்கள் செல்ஃபி எடுத்தும், சிறுவர்கள் விளையாடியும் மகிழ்ந்தனர்.