திருவண்ணாமலை அக்.16-
நவராத்திரி விழாவின் நிறைவாக ஆயுத பூஜை விழாவும் அதனை தொடர்ந்து விஜயதசமி விழாவும் தமிழகத்தில் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுதபூஜை விழாவையட்டி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் ஆயுதபூஜை விழா கொண்டாடினர்.
ஆயுத பூஜை அன்று வீடுகளை சுத்தப்படுத்தி நாம் பயன்படுத்தும் வாகனம், வீட்டில் அடிக்கடி கையாளும் பொருட்களை சுத்தப்படுத்தி அவற்றிற்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி வியாழனன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தப் படுத்தி பயன் படுத்தும் வாகனம் வீட்டில் அடிக்கடி கையாளும் பொருட்களை சுத்தப் படுத்தி அவற்றிற்கு பூஜை செய்து வழிபட்டனர்.
இதே போல நேற்று விஜயதசமியை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் சரஸ்வதி பூஜையில் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை வைத்து வழிபட்டனர்.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சாலையனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் டி.மாசிலாமணி தலைமையில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமிர்தம்மாள் சண்முகம், ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சக்திவேல் சுமதி, பாஸ்கர், வெங்கடேசன், துர்கா சுரேஷ், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ஏழுமலை மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு சுவாமிக்கு பூஜை செய்த பிரசாதம் பழங்கள் இனிப்பு மற்றும் பொறிக்கடலை உள்ளிட்ட பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் டி.மாசிலாமணி வழங்கினார்.
இதே போல திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் ஆகியோர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் பிரசாதம் பழங்கள் இனிப்பு மற்றும் பொறிக்கடலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.