காஞ்சிபுரம், செப். 15 –

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  பேருந்து நிலையம்  அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்நிலையில் அவ்வாலயத்தின் முன்பக்கம் நுழைவுவாயிலின் வலது புறத்தில் சிறிய கோவில் உள்ளது. அந்த கோவிலின் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தினை நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர், திருடிச்சென்றுவுள்ளனர்.

மேலும் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து உத்திரமேரூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here