கும்பகோணம், ஏப். 18 –

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று சித்திரை பெருவிழாவின் 9 ஆம் நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக போற்றப்படுவது சுவாமிமலை முருகன் கோயிலில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை இரு வேளையும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

5ம் திருநாள் இரவு பஞ்சமூர்த்திசுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாளான இன்று வள்ளி தேவயானை சமேத முருகப் பெருமான் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

10ம் நாளான நாளை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. பின்னர் இரவு கொடியிறக்கம் செய்யப்பட்டு,  சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப செல்லும் நிகழ்ச்சி நடைப்பெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here