திருவள்ளூர், ஜூன். 19 –
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் தலைமை வகித்தார், மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் டி. எல்.சதாசிவலிங்கம், திருவள்ளூர் மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் பொன் மகேஷ், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொன்னேரி அரசு மருத்துவமனை, ஆரணி அரசு மருத்துவமனைகளில் இன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் புழல் வில்சன், ஆரணி சுகுமாரன், மீஞ்சூர் சிவக்குமார், திருப்பாலைவனம் வினோத் குமார், மீஞ்சூர் குரு சாலமோன், உள்ளிட்டவர்களும், திரளான அக்கட்சித் தொண்டர்களும் உடனிருந்தனர்.



















