கும்பகோணம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மேலும் அக்கோயில் பல்வேறு இன்னல்களை போக்க கூடிய சரபேஸ்வரர் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. மேலும் அக்கோயிலின் உருத்திரபாத திருநாள் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
.முன்னதாக கோயிலில் உள்ள பெரிய கொடிமரத்திற்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விநாயகர் சுவாமி அம்பாள் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் சண்டிகேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள ரிஷப கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. அந்நிகழ்வில் தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மாலையில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான 5 ஆம் நாளான வருகிற 19 ஆம் தேதி சகோபுர தரிசனமும், 7 ஆம் நாளான 21 ஆம் தேதி திருக்கல்யாணம் பிரம்மோற்சவம் 8 ஆம் நாளான 22 ஆம் தேதி ரதா ரோஹணமும் 9 ஆம் நாளான 23 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும் 10 ஆம் நாளான 24 ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நிகழ்வும் தொடர்ந்து 31ஆம் தேதி ஸ்ரீ சரபேஸ்வரர் ஏகதின உற்சவமும் சரப மூர்த்தி சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. அச்சிறப்பு வாய்ந்த அத்திருக்கோயிலின் அனைத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளையு கோவில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் வெகுச் சிறப்பாக செய்து வருகின்றனர்.





















