பாபநாசம், மார்ச். 10 –
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் சென்னையில் ‘அகில இந்திய மாநாடு 2023 நடைபெறுகிறது.
இதுக்குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இந்திய முஸ்லீம் லீக் கட்சி என்பது ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், மேலும் அக்கட்சியின் 75 வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு சென்னையில் நடைப்பெற உள்ள அகில இந்திய மாநாடு 2023 வெற்றப் பெறவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துவுள்ள வாழ்த்து மடலில், 1906-ல் ‘இந்திய முஸ்லிம் லீக்’ உருவாக்கப்பட்டு அதன் மூலம் நாட்டின் விடுதலைப்போராட்டத்தில் முஸ்லிம்களை ஒருங்கிணைத்தது எனவும்,
மேலும், முஸ்லிம் லீக், வெறும் சுதந்திரப்போராட்டத்தை மட்டும் முன்னெடுக்காமல் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், பிற மதத்தவரிடையே சமூக நல்லிணக்கத்தையும் வளர்த்தது எனவும்,
மேலும் நாடு விடுதலைப் பெற்ற பிறகு நாடு பிரிவினைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று இந்திய முஸ்லிம்கள் மீது அபாண்டமான முறையில் பழிசுமத்தப்பட்டு இந்திய முஸ்லிம்கள் குற்றவாளிகளைப் போன்று சித்தரிக்கப்பட்ட நிலையிலும், இந்திய முஸ்லிம்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடிய இயக்கம்தான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றால் அது மிகையாகாது என்றவாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் தலைமையில் செயல்பட்ட இக்கட்சி, கேரள மாநிலத்தில் ஆட்சிக்கட்டிலில் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்தது எனவும், மேலும் தமிழ்நாட்டிலும் கூட 1967ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம் லீக் கட்சியின் பங்கு பெரிதும் துணையாக இருந்துள்ளதெனவும், மேலும், வரலாற்று ரீதியாகச் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அரசியல், கல்வி, சமூக ரீதியாக மேம்படுத்தியதில் முஸ்லிம் லீக்கின் பங்கு அளப்பரியது. என்று அம்ம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுப்போன்ற நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ள முஸ்லிம் லீக் அதன் பவள விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. எனவும், முஸ்லிம் லீக்கின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் MLA வுமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.
தம்பட்டம் செய்திகளுக்காக பாபநாசம் செய்தியாளர் தீனா





















