திருவாரூர், அக். 04 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியின் வீட்டருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நாச்சிகுளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்மார்க்ஸ் (வயது 25 ) என்பவர் அக்கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்று அங்கு கட்டாயப்படுத்தி வன்புணர்வு செய்ததாக தெரிய வருகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஊருக்கு திரும்பி வந்தவுடன் நடந்ததை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கல்லூரி மாணவி தந்தைக்கொடுத்த புகாரின் அடிப்படையில் அக்காவல் நிலைய ஆய்வாளர் துர்கா வழக்குப் பதிவு செய்து, அருள் மார்க்சிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வர அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






















