மீஞ்சூர், மார்ச். 10 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேலும் இம்முகாமில் கண்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று 66 அப் பயனாளிகளுக்கு, இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் விழா மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ். துணை தலைவர் அலெக்சாண்டர்.மீஞ்சூர் நகர கழக திமுக செயலாளர் தமிழ்உதையன். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 66 பயனாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளை வழங்கினார்.
அனைத்து வணிகர்களின் பேரமைப்பின் நிர்வாகிகளான சுரேஷ். ராஜேந்திரகுமார். வேல்ராஜ். ராஜன். பாபு(எ) அஜிஸ். ரியாஸ் அகமது. எழிலரசன். பாலசுப்பிரமணி. ஷாயின்ஷா. அபூபக்கர். கதிர்வேலு. கணேஷ் குமார். நாராயணன். உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அமைப்பு செயலாளர் முகமது அலி நன்றியுரை நிகழ்த்தினார். திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி இனிதாக நிறைவுப் பெற்றது.





















