மீஞ்சூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அருநோதைய காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் திமுக ஆட்சி அமைந்ததும் இருளர் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு தனி கவனம் செலுத்த உத்தரவு பிறப்பித்ததன் பேரில் இப்பகுதியில் வாழும் இருளர் இன மக்களின் கோரிக்கை ஏற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு மூன்றின் இன் 2023-24 ஆண்டிற்கான பெருநிறுவன சுற்றுசூழல் நிதியிலிருந்து கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 43.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், மேலும் ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா அன்பழகன், வார்டு உறுப்பினர் கோமதி நாயகம், கழக முன்னோடிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
இப்பகுதி மக்களுக்கு தற்போது ரூபாய் 2.25 கோடி மதிப்பீட்டில் 48 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சில மாதங்களுக்கு முன்பு புதிய சிமெண்ட் சாலைகள் இதே பகுதியில் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. தங்களுக்கு பலவேறு நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.