பொன்னேரி, ஜூன். 21 –

பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும் நடைப்பெற்றது.

டெல்லியில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர்களின் மீது நேஷ்னல் ஹெரால்டு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும். அதனை கண்டிக்கின்ற வகையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அண்ணா சிலை முன்பு மாநில காங்கிரஸ் கமிட்டி செயலாளரும். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் டி.எல்.சதாசிவலிங்கம், பொன்னேரி நகர தலைவர் கார்த்திகேயன், ஆரணி நகர தலைவர் சுகுமாரன்,  உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டனர் .பின்னர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் செய்தியாளரிடம் பேசுகையில்   பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக அன்னை சோனிகாந்தி மற்றும் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்டுள்ள நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கினை சட்டபடி எதிர்கொள்வோம். எத்தனை பொய் வழக்கு போட்டாலும் காங்கிரஸ் கட்சி அஞ்சாது என்றும் விரைவில் பா.ஜ.க அரசுக்கு நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். மேலும், பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தால் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here