பொன்னேரி, டிச. 28 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள திருவேங்கடபுரத்தில் ஐயப்ப பக்தர்களின் 43 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது,
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் அப்பகுதி ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு ஐயப்ப மலைக்கு செல்வது வழக்கமாகும். அதனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து திருவிளக்கு பூஜை நடத்துவார்கள். அதில் கிராம மக்கள் என திரளானவர்கள் பங்கேற்று அவ்விழாவின் வெகுச்சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அதுப்போன்று நடப்பாண்டிற்கான 43 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை அப்பகுதியில் உள்ள பெண்கள் திருவிளக்கினை ஏந்தி ஊர்வலமாக அணி வகுத்து வர அவ்விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
மேலும் அப்பூஜை தடப்பெரும் பாக்கம் ஊராட்சி திருவேங்கடபுராம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் துவங்கி, ஆயிரக்கணக்கான பெண்கள் கைகளில் விளக்குகள் ஏந்தி ஐயப்ப சாமி அலங்கரிக்கப்பட்டு பேரணியாக அப்பகுதி முழுவதும் வளம் வந்து பொன்னியம்மன் திருக்கோவிலுக்கு வந்து நிறைவு செய்தனர்.
முன்னதாக அப்பேரணியை அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்து பங்கேற்ற பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு ஐயப்ப பக்தர்கள் குழு மற்றும் அப்பகுதி மக்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தொடர்ந்து அப்பேரணியை எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்,
அதனைத் தொடர்ந்து பொன்னியம்மன் திருக்கோவிலில் ஐயப்ப சுவாமியின் சிறப்பு ஆராதனைகளும் பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் பக்தி பாடல்களும் நடைபெற்றது இதில் தட பெரும்பாக்கம், வேண்பாக்கம், திருவேங்கடபுரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் திருவேங்கடபுரம் பகுதியில் வசிக்கும் ஈஸ்வரிராஜா, ஒன்றிய செயலாளர் சுகுமாரன், ஜி.வி.என்.குமார், நந்தன், தடப்பெரும்பாக்கம் குமார், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.























