மதுரை; நவ.11-

தென்மண்டல காவல் துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன், உத்தரவின் பேரில், பூமி வெப்ப மயமாதலை தடுக்கும் விதமாகவும், மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று காலை மரம் நடுவிழா நடைபெற்றது.

இம்மர நடு விழாவில் நம் தமிழ்நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அக்கால தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட இம் மண்ணின் மரங்களான கடம்பு, அரசு, வேங்கை, நாகலிங்கம், மகிழம், இலுப்பை, கருங்காளி, வலுக்கை, கூந்தப்பனை, செந்சந்தனம், பாடாதி, மகாகனி, மந்தாரை, மலைவேம்பு, பலா, புங்கை, பூவரசு, சரக்கொன்றை, செந்நாவல், மருதம், பிள்ளமருது, மகாவில்வம் ஆகியவற்றையும் மனோரஞ்சிதம், செம்பகம், பாரிஜாதம், பவளமல்லி, அடுக்கு நந்தியாவட்டை ஆகிய மலர் தாவரங்களை  தென்மண்டல காவல் துறைத் தலைவர்  சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் அலுவலர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here