கும்பகோணம், மே. 20 –
கும்பகோணத்தில் இன்று விஜயலட்சுமி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கோவி.அழகேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் முன்னிலையில் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சை வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் ஐயாராசு, தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குட்டி.தட்சிணாமூர்த்தி, மாநகர துணை செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவர் பாவை மணி, கும்பகோணம் மாநகர தலைவர் ராஜேஷ், கோபு ரமேஷ், செந்தில், சரவணன், கார்த்தி மற்றும் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





















