மதுரை:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, முட்டை கொள்முதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை முறையாக இல்லை எனவும், நிறைய பாகுபாடு இருப்பதாகவும் கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் முட்டை டெண்டர் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட், அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் செய்யும் டெண்டருக்கான அரசாணை 57-ஐ ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here