ராமநாதபுரம், ஜூலை 7-
தமிழக அரசு மாணவர்களுக்கு எத்தனையோ விதமான உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் ஒவ்வொரு மாணவரும் அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக அரசே போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமையும் நடத்துகிறது. இந்த பயிற்சி முகாமை ஒவ்வொரு போட்டியாளர்களும் நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வு எழுத உள்ள போட்டியாளர்களுக்கான இலவச பயிற்சி முகாமை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்து பேசும்போது, தமிழக அரசு பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது. இதயதெய்வம் அம்மா கொண்டு வந்த லேப்டாப் வழங்கும் திட்டம் இந்தியாவில் தமிழகம்தான் தலைசிறந்து விளங்கி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கி வருகிறோம். மேலும் பள்ளி செல்லும் மாணாக்கர்களுக்கு விலையில்லா சைக்கிள் உட்பட 14 விதமான உபகரணங்கள் வழங்கி மாணவர்கள் கல்வியை சிறந்து கற்க வேண்டும் என்பதில் தனிகவனம் செலுத்துகிறோம். தற்போது கல்வி கற்றப்பின் வேலைக்கு செல்ல நினைக்கும் போட்டியாளர்களுக்கும் உதவும் வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்வது எப்படி வெற்றி பெறுவது, குடும்ப சூழல் அறிந்து போட்டியில் வெற்றி பெற்று அரசு ஊழியராக வேண்டும் என்பதில் தனிகவனம் செலுத்தி இலவச பயிற்சி வழங்குகிறோம். இதில் ஒவ்வொருவரும் பங்கேற்று பயிற்சி பெற்று அரசு பணியில் சேர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பேசினார். பின் போட்டி தேர்வு எழுதுவோருக்கு அறிவு சார்ந்த புத்தகங்களை இலவசமாக வழங்கினார். இந்நிகழ்வில் பரமக்குடி எம்எல்ஏ சதன்பிரபாகரன், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

முதுகுளத்தூர் அமமுக  ஒன்றிய செயலாளர் பழனி தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் முன்னிலையில்  மீண்டும் தன்னை தாய் கழகமான அதிமுகவில்  இணைந்து கொண்டார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here