திருவாரூர், மே. 26 –
திருவாரூர் மாவட்டம், தேவர் கண்ட நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கீழத் தெருவில் தமிழ்நாடு அரசின் டாஸ்மார்க் கடையை அப்பகுதியில் புதிதாக திறக்க முயற்சி எடுத்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் பகுதிக்கு டாஸ்மார்க் கடை வேண்டாம் என்றும் டாஸ்மார்க் கடையின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், குழந்தைகளோடு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட அவ்வூர் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியில் டாஸ்மார்க் கடை திறக்க கூடாது எனவும், மேலும் அப்பகுதி அருகிலேயே ரயில்வே கேட் உள்ளது என்றும் மேலும் அதிக மக்கள் அப்பகுதியில் வசிப்பதால் டாஸ்மார்க் கடை திறக்கும் திட்டத்தையும், முயற்சியையும் அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் தேவர் கண்ட நல்லூர் மக்கள் கோரிக்கை விடுத்து மனுவினை வழங்கினார்கள்.





















