ராமநாதபுரம், ஆக. 17-தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் போலீஸ் பணிக்கான தேர்வு எழுதுபர்களுக்காக தமிழ்நாடு போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச மாதிரி தேர்வு ஆக.18ல் நாளை நடைபெற உள்ளது. இத் தேர்வில் மாநில அளவில் முதல் 50 இடங்களை பிடிப்பவர் களுக்கு இலவசமாக குரூப் 2 பயிற்சி வழங்கப் படும், என தமிழ்நாடு போட்டி தேர்வு மையங் களின் கூட்ட மைப்பின் மாநில தலைவர் ராஜபூபதி அறிவிப்பில் தெரிவித் துள்ளார்.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் அரசு பணிகளில் அவ்வப் போது போட்டி தேர்வு நடத்தி ஆட்கள் தேர்வு செய்து கீழ் நிலையிலிருந்து அதிகாரி பணியிடம் வரை பணியிடங்கள் நிரப்பப் பட்டு வருகிறது. இதன் காரணமாக படித்த இளைஞர்கள் பலரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத அதிகளவில் ஆர்வம் காட்டி தேர்வுகளை சந்தித்து அவரவர்கள் தகுதிக்கு தகுந்தாற் போல் அரசு பணியில் சேர்ந்து வருகின்றனர். இதில் சில பட்டதாரிகள் தங்களிடம் உரிய திறமை இருந்தும் திறமையை பயன்படுத்த தெரியாமல் போட்டி தேர்வுகளை சரிவர எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். இது போன்ற திறமை உள்ளவர் களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்து என்னாலும் சாதிக்க முடியும் என காண்பிக்க வைப்பதற் காகவே தமிழகத்தில் போட்டி தேர்வு எழுது வோர்க்கான பயிற்சி மையங்கள் பல துவங்கப் பட்டுள்ளன.
ரேடியன் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் தனி சிறப்பு:
சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள ரேடியன் ஐஏஎஸ் அகாடமி நிறுவனம் சற்று வித்தியாசமான முறையில் அரசு அலுவலர்கள், அதிகாரிகளை உருவாக்குவது மட்டுமின்றி அவர்களை நெஞ்சம் நிமிர்ந்து பணியாற்ற வைப்பதையும் சமுதாய சிந்தனையோடு உருவாக்கி வருகின்றனர். அதாவது, ரேடியன் ஐஏஎஸ் அகாடமியில் பயின்று போட்டி தேர்வு எழுதியவர்களில் இதுவரை 25 ஆயிரத்திற்கும மேற்பட்டவர்கள் தமிழகத்தின் டிஎன்பிஎஸ்சி மட்டுமின்றி மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வுகளிலும் சாதித்து பல்வேறு துறைகளில் அரசு அதிகாரி களாக பணியாற்றி வருகின்றனர். ரேடியன் அகாடமியில் பயிற்சி பெற்று அரசு பணியில் சேர்ந்தவர்கள் ஒரு சபதத்துடன் பணி யாற்றி வருகின்றனர். அதாவது, “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” என்ற உயர்ந்த சிந்தனையை ரேடியன் அகாடமி ஒவ்வொரு போட்டியாளரிடமும் பயிற்சியின் போதே மனதில் உருவாக்கி விடுகின்றனர். இதன் மூலம் இங்கிருந்து பயின்று சென்ற பலர் இன்றும் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் லஞ்சத்திற்கு இடமின்றி நேர் கொண்ட பாதையில் தங்கள் பணி பயணத்தை தொடர் கின்றனர். அதனால் ரேடியன் அகாடமி தமிழகத்தின் தனி சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் 50 இடங்களில் இலவச போட்டி தேர்வு: தமிழகத்தில் இலவச போட்டி தேர்வு எழுதலாம் ரேடியன் ஐ.ஏ.எஸ். அகாடமி யின் நிர்வாகியும் தமிழ்நாடு போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பின் தலைவருமான ராஜபூபதி அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத உள்ள போட்டியாளர்களுக்கு தமிழகத்தில் சென்னை, ஊட்டி, உடமலைபேட்டை, அந்தியூர், அம்பாசமுத்திரம், ஆரணி, ஆத்துார், செங்கம், கோவை, எடப்பாடி, ஈரோடு, குடியாத்தம், ஓசூர், கள்ளகுறிச்சி, மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி, காஞ்சிபுரம், காரைக்குடி, கரூர், சேலம், கிருஷ்ணகிரி, கும்பகோணம், மதுரை, மார்த்தாண்டம், மயிலாடுதுரை, நாகர்கோவில், ராமநாதபுரம் என தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இன்று (ஆக.18ம் தேதி) இலவச மாதிரி போட்டி தேர்வு நடைபெற உள்ளது. காலை யில் குரூப் 4 தேர்வும் பிற்பகலில் போலீஸ் பணிக்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம். தமிழகத்தில் நடைபெறும் இந்த மாதிரி இலவச தேர்வில் பங்கேற்று மாநிலத்தில் முதல் 50 இடங்களை பெறும் போட்டியாளர் களுக்கு அவரவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் குரூப் 2 தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப் படும். தேர்வு எழுத உள்ளவர்கள் 98403 98093 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். ஊட்டி மற்றும் உடமலைபேட்டையில் தேர்வு எழுத விரும்பு வோர் போன் செய்து தங்கள் பெயரை தவறாமல் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித் துள்ளார். ஆலோசனைக் குழு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், பூமிநாதன், கல்யாணசுந்தரம், சத்தியமூர்த்தி, பேராசிரியர் நெல்லை உலகம்மாள் மற்றும்
தமிழ்நாடு போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பின் செயலாளர் தமிழ் இயலன், பொருளாளர் நடராஜ சுப்பிரமணியன், துணைத்தலைவர்கள் கணேஷ் சுப்பிரமணியம்,வளன் இணைச்செயலர்கள் வீரபாபு, ஹரிஹரன், துணை பொருளாளர்கள் வி.எஸ்.ராஜ், ரகமத்துல்லா ஆகியோர் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.