காஞ்சிபுரம், ஆக. 15 –
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு கொண்டாடப்பட்ட 75 வது சுதந்திர தினம் இதுவாகும். இவ்விழாவில் பெண் மேயர் தேசியக்கொடியேற்றி வீர வணக்கம் செலுத்தினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மேயர் மகாலட்சுமி கொடியேற்றி மரியாதை செலுத்தி அரசு அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, சமதான புறாக்களை வானில் பறக்கவிட்டார். பின்பு அலுவலகத்தில் உள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.