கும்பகோணம், நவ. 27 –
கும்பகோணத்தில் தேசிய மாணவர் படையின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் என்.சி.சி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தேசிய மாணவர் படையின் 75 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில், இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இம்முகாமை புலத்தலைவர் பேராசிரியர் இராமசாமி துவக்கி வைத்தார். மேலும், இம்முகாமில் 8 வது பட்டாலியன் என். சி. சி. யின் தேசிய மாணவர் படை மாணவ மாணவியர்கள் மற்றும் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் தன்னார்வ மாணவ மாணவிகள் என 75 பேர் இரத்த தானம் செய்தனர்.
அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கிக்கு இம்முகாமில் பெற்றப்பட்ட இரத்தம் அளிக்கப்பட்டது. இம்முகாமில் மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் சுகந்தி, ஒருங்கிணைப்பாளர் சலீம் பாட்சா, அனிதா, மருத்துவர்.கீர்த்தனா, உஷா மற்றும் என்.சி.சி 8வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திரசேகர் உத்தரவின்படி, நிர்வாக அதிகாரி லெப்ட் நன் கானல் ராஜு அறிவுரையின்படி, சாஸ்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்திய சுப்ரமணியன் வழிகாட்டுதலின்படி தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் செந்தில்நாதன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.




















