சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதிக்கும், மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் நடைப்பெறும் மக்களவைக்கான வாக்குகள் 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 42.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மேலும் அதிக பட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இடைத் தேர்தலில் அதிகபட்சமாக ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 50.74 சதவீதமும், குறைந்தபட்சமாக பெரியகுளத்தில் 32.8 சதவீதமும் பதிவாகியுள்ளதாகவும், இதே போல் புதுச்சேரி மக்களவை தொகுதியில் 1 மணி நிலவரப்படி 33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்ட 305 இடங்களில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப் பட்டுள்ளதாகவும், 525 விவிபேட் இயந்திரங்களும் மாற்றப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதால், வாக்குப்பதிவு தொடங்கவே இல்லை மேலும் கோளாறு காரணமாக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப் பட்டுள்ளன. அடுத்த வாக்குப்பதிவு நிலவரம் 4 மணிக்கு வெளியாகும். என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.