திருவாரூர், ஆக. 09 –

பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சரி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அரசவனங்காடு கிளை சார்பாக சிறப்பு கிளைக் கூட்டம் நடைபெற்றது .

இக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் வரதராஜன், கலியமூர்த்தி ஒன்றிய தலைவர் சிமிழி ஐயப்பன் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்திய பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு. முருகானந்தம் பேசும் போது அடிமட்ட தொண்டர்களும் உயர் பதவிக்கு வரலாம். பிற கட்சிகளைப் போல குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும்,  அல்லது மேலே  உள்ளவர்களின் உதவியுடன் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்ற நிலை உள்ளது.

ஆனால் பாஜகவில் மட்டும்தான் அடிமட்ட தொண்டனும் உயர் பொறுப்புக்கு வரலாம் என்றார். அதற்கு உதாரணம் கூறவேண்டும் என்றால் நமது பாரத பிரதமரை எடுத்து காட்டாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாட பாரத பிரதமர் உத்தரவிட்டதன் பேரில் அனைவரும் தேசியக்கொடியை அவரவர் வீடு௧ளில் ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.

மேலும், நமது கட்சியை பலப்படுத்தி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற உழைத்திட வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன்,  மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு. மாநில செயற் குழு உறுப்பினர் கோட்டூர் இராகவன், மாவட்ட பொதுச் செயலாளர்கள்  செல்வம், செந்தில் அரசன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஒன்றிய பொதுச் செயலாளர் வெங்கட்ராஜ் நன்றிவுரையாற்றினார். மேலும் அரசவனங்காடு கிளையில் புதிதாக பாரதிய ஜனதா கட்சியில் தங்களை உறுப்பினர்களாக பலர்  இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அரசவனங்காடு பாஜக கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here