கும்பகோணம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுமான மேலும் ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும் ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார். என தல வரலாறு கூறுகிறது.
மேலும் சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பிரமோற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதே போல இவ்வாண்டுக்கான விழா, கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சூரியபிரபை, சந்திர பிரபை,பூத வாகனம், ஷேச வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான 19 ஆம் தேதி ரிஷப வாகனத்தில் ஓலைச்சப்பரமும், 7ஆம் திருநாளாக 21ஆம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும், நடைபெற்றது. 9 ஆம் நாளான இன்று பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருத்தேரில் எழந்தருள திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
தொடர்ந்து 10 ஆம் நாளான இன்று பஞ்சமூர்த்திகளும் மகாமக குளக்கரையில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது. 11 ஆம் நாள் 25 ஆம் தேதி ஸப்தாவரணம், 12 ஆம் நாள் 26 ஆம் தேதி விடையாற்றி, வீதியுலாமும் 13 நாள் 27 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தைடன் இவ்வாண்டுடிற்கான பங்குனி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

























