பூவிருந்தவல்லி, ஆக. 09 –
எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி செல்போனில் சுதந்திரத் தின வாழ்த்துச் செய்தி அனுப்பி உலக சாதனைப் படைத்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆக 15 அன்று இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள நிலையில், அதற்கு முத்தாய்ப்பாய் பூவிருந்தவல்லியை அடுத்துள்ள ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் இருபதாயிரம் பேர் ஒரே நேரத்தில் எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று திரண்டு இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு செல்போனில் வாழ்த்துச்செய்திகள் அனுப்பி உலகச்சாதனைப் படைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்வினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் 20 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் தேசிய கொடிகளை வைத்து அசைத்தபடி ஒரே நேரத்தில் அனைவரும் செல்போனில் சுதந்திர தின வாழ்த்து செய்தியை தெரிவித்தனர். இந்நிகழ்வை உலக சாதனையாக அறிவித்து உலக சாதனைகள் ஒன்றியத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் உலக சாதனை விருதினை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகத்திடம் வழங்கினார்