ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாயபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸ்மேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
ராமநாதபுரம் அருகே மாயபுரம் கிராமத்தில் யாதவ மகா ஜனங்களுக்கு பாத்தியப் பட்ட ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் மற்றும் பரிவார மூர்த்திகளான நூதன ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ கருட, ஸ்ரீ அனுமார், ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீ விஷ்வஷேனர், ஸ்ரீ காளிங்க நர்தன சந்தான கோபால கிருஷ்ணன், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயகிரிவர் ஆகிய தெய்வங்களின் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி ஸ்ரீ மஹா சுதர்ஷன ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து பகவத் அனுக்ஹை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் வேதங்கள் முழங்க மூன்று கால யாகசாலை பூஜை நடந்தது. ஜூன் 14ம் தேதி காலை 7.25 மணிக்கு மேல் கிராம தலைவர் மாடசாமி தலைமையில் முன்னாள் வி.ஏ.ஓ.,கிருஷ்ணன், விழா கமிட்டியாளர்கள் கார்மேகம், முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கிருஷ்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் புனித நீர் குடத்தை சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்து கோபுர கலசங்களில் வேதவிற்பன்னர்கள் வேதங்கள் முழங்க வானத்தில் கருடபகவான் வட்டமிட புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர். கும்பாபிஷேக விழாவை காண கூடிநின்ற மக்களுக்கு புனித நீர்தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சத்தியபாமா ருக்மணி சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தச்சாத்தநல்லுார் ஸ்தபதி முருகேசன் கோயில் சிற்பங்களை தத்ருபமாக வடிவமைத்து இருந்தது காண்போரை கடவுளை நேரில் கண்டது போல் காட்சியளித்ததாக வணங்கி சென்றனர். மிகசிறப்பாக பணியாற்றிய ஸ்தபதிக்கு கோயில் விழா கமிட்டி சார்பில் தங்கமோதிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டார். விழா ஏற்பாடுகளை அழகுமுத்துக்கோன் யாதவர் பேரவை, இளைஞர் சங்கம், மகளிர் சங்கம் இணைந்து செய்திருந்தன. 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here