பொன்னேரி, ஏப். 02 –

பென்னேரியில் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இது குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை மத்திய அரசுக்கு எதிராக நடத்த அக்கட்சியின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு இன்றைய தினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளுர் மாவட்டம் பென்னேரி வட்டாரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி வட்டாரத்தில் அடங்கிய பல்வேறு இடங்களான இளவம்பேடு. தடப்பெரும்பாக்கம். வேண்பாக்கம். பொன்னேரி. சின்னம்பேடு. ஆரணி. தச்சூர்கூட்டுசாலை. உள்ளிட்ட 7 இடங்களில் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர்.

இந்த ஆர்பாட்டங்களை ஜெயராஜ். நாகராஜ்.பிரேம் சந்திரன். நாகராஜ். தேவி. உள்ளிட்டவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை திரும்பப்பெற வேண்டும் அரசு நிருவனங்களை  தனியார் மயமாக்குவது கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்தும் கோஷங்கள் எழுப்பி நடத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here