கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரதீப்,கோதண்டபாணி என்ற இருவர் பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ரூ. 9 இலட்சம் வரை வசூல் செய்து, தவணைக் காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறைப்படுத்தினர்.
திருவள்ளூர்; அக்.2-
கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தில் எல்.வீ. காம்பளக்ஸில் எல்.வீ.கே. டிரேடர்ஸ் பி லிமிடெட் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பிரதீப், கோதண்டன் எனும் இருவர் அப்பகுதி மக்களிடம் தங்கள் நிறுவனத்தில் ரூ. பத்தாயிரம் செலுத்தினால், இரண்டு கிராம் தங்கம், மற்றும் 40 மாதங்களுக்கு பின்பு ரூ. இருபதாயிரமாக இரட்டிப்பாக தரப்படும் என கவர்ச்சி கரமான திட்டத்தின் வாயிலாக அப்பகுதி பொதுமக்களிடம் ரூ.9 இலட்சம் வரை வசூல் செய்து அவர்கள் குறிப்பிட்ட தவணைக் காலம் முடிந்தும் திருப்பி தராமல் ஏமாற்றிய நிலையில் பள்ளிப்பட்டு வட்டம், கோரகுப்பத்தைச் சேர்ந்த இருசப்பரெட்டியின் மகன் தேவராஜ் என்பவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அவர் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பளார் அரவிந்தனின் உத்திரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் தலைமையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் உட்பட போலீசார் விசாரணை நடத்தி கொல்கத்தா நெடுஞ்சாலை எல்.வீ. காம்பளக்ஸில் இயங்கி வந்த எல்.வீ.கே. டிரேடர்ஸ் பி லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த பிரதீப், கோதண்டன் என்ற இருவரையும் கடந்த செப்.27 அன்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.