தமிழ்நாடு காவல் உயர்பயிற்சி அகாடமியில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான திறனாய்வு போட்டிகள் சுமார் 20 பிரிவுகளின் கீழ் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வந்தது. இதில் திருவள்ளூர் காவல் மாவட்டத்தின் சார்பாக 21 பேர் இதில் கலந்துக் கொண்டனர்.

அதில் புலனாய்வு வீடியோ பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட முது நிலை போலீஸ் போட்டோ நிபுனர் பிரகதீஷ் முதலாம் இடம் பிடித்து தங்கபதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.அரவிந்தன் வெகுவாக பாராட்டினார்