காஞ்சிபுரம், ஆக. 25 –
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி பகுதியில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கி அக்கட்சித்தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
தேமுதிக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி உத்திரமேரூர் ஒன்றிய கழகச் செயலாளர் அழிசூர் கன்னியப்பன் மற்றும் பேரூர் கழக செயலாளர் ஐயப்பன் தலைமையில், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு கழகத்தின் கல்வெட்டுகளை புதுப்பித்தும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேமுதிக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் கழக தொழிற்சங்க மாநில துணை செயலாளர் வேணு ராம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ஆகஸ்ட் 25ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி குழந்தைகள் காப்பகத்தில் சுமார் 500 குழந்தைகளுக்கு அறுசுவை மதிய உணவு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு பேனா பென்சில் ரப்பர் போன்ற கல்வி உபகரணங்களை தேமுதிக மாநிலத்துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் கழக தொழிற்சங்க மாநில துணை செயலாளர் வேணுராம் ஆகியோர் மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி பின்னர் அவர்களுடன் உட்கார்ந்து அறுசுவை உணவினை சாப்பிட்டனர்.
இந்த விழாவில் மாவட்ட அவை தலைவர் வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் லட்சுமணன் பொதுக்குழு உறுப்பினர் தமிழ் குமரன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரசுராமன் ஒன்றிய அவை தலைவர் இளையபெருமாள் ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் ஒன்றிய துணை செயலாளர்கள் சங்கர் பாலசுந்தரம் மோகன ராமன் மாவட்ட பிரதிநிதி ஏழுமலை தணிகைவேல் தொண்டரணி செயலாளர் உதயகுமார் தொண்டரணி துணை செயலாளர் சுவாமிநாதன் மகளிர் அணி செயலாளர் லதா பவளக்கொடி காயத்ரி அம்மையப்பநல்லூர் கிளை நிர்வாகிகள் தங்கராஜ் கிருஷ்ணா பேரூர் கழக பொருளாளர் சீனிவாசன் மாவட்ட பிரதிநிதி ராஜீவ் காந்தி மற்றும் சிதம்பரம் சண்முகம் சங்கீதா
அண்ணா நகர் தொழிற்சங்க தலைவர் தங்கராஜ் கிளை கழக நிர்வாகிகள் ஐயப்பன் எடிசன் ஆண்ட்ரூஸ் பெருமாள் ரமேஷ் சக்திவேல் நாராயணன் வினோ பரத் திலகா ஜோனஸ் வெங்கடேஷ் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.