நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மகள் முபினா பேகம் (வயது17). இவர் வளர்ப்பு தந்தை சாகுல் அமீது. வீட்டில் இருந்து கடந்த 23-ந்தேதி ஜெராக்ஸ் எடுத்து வர கடைக்கு சென்றார். அதன் பிறகு முபினா பேகம் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சாகுல் அமீது கொடுத்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளை அருகே உள்ள பர்கிட் மாநகர் பகுதியை சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (85). சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஆறுமுகத்தம்மாள் 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது மகன் முருகன் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தம்மாளை தேடி வருகிறார்கள்.
செங்கோட்டையில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி வனிதா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வனிதா கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற வனிதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் தெரியவில்லை.
இதுகுறித்து மாரியப்பன் செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வனிதாவை தேடி வருகிறார்கள்.