கும்மிடிப்பூண்டி, மார்ச். 08 –

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், நேமளூர் ஊராட்சியில் அமைந்துள்ள தாதன்கண்டிகை கிராம பழங்குடியின காலனியில் சர்வதேச மகளிர் தின விழா அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வி டாக்டர் எ.இளவரசி தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு,பொருளாளர் ஆர்.பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தம்மாள் செல்வம், 11-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் கே.சிவா ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் தின சிறப்பு குறித்து எடுத்துக்கூறினர்.

பின் தொடர்ந்த நிகழ்வில் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினர். மேலும், இப்பகுதியில் வசித்து வரும் 45 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வீடு தேடி சென்று அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வி டாக்டர் எ.இளவரசி வழங்கினார்.

முன்னதாக அனைவரையும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கென்னடி, வேலாயுதம், தினகரன், சிராஜ், மல்லிகா, நாகராணி, அனிதா, சத்தியா, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். முடிவில், நிஷாந்த், எம்ரோஸ், செல்வம், நவீன்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் அறக்கட்டையின் சார்பில் நன்றியினை கூறினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here