மீஞ்சூர், மே. 27 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இயங்கி வருகிறது, இந்தியன் ஆயில் ஐ.பி.பி.எல் என்ற தனியார் தொழிற்சாலை. இத் தொழிற்சாலையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நபர்க்கள் மேல் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவர்கள் தொழிற்சாலையின் பணிகளில் உடன் ஊழியர்களாக சுமார் 10 ஆண்டு காலத்திற்கு மேல்  பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, வீட்டு  வாடகைப்படி, போக்குவரத்து படி, குழு விபத்து காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை வழங்கிடவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது முறையாக உள்ளிருப்பு போராட்டத்தை  நடத்தினர்.

இன்று காலை துவங்கப்பட்ட போராட்டத்தால்  தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றி பெறும் வரை உள்ளிருப்பு போராட்டம் நீடிக்கும் என்று தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், தொழிலாளர்கள் நடத்தும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தால் தமிழகம் .ஆந்திரா .கேரளா. கர்நாடகா .மற்றும் வெளிமாநிலங்களுக்கு  சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தை அறிந்த பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நிறுவனத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை சந்தித்து அவர்கள் தரப்பு கோரிக்கைகளை கேட்டறிந்து அது தொடர்பாக தொழிற்சாலையின் நிர்வாகத்திடம் பேசி தொழிலாளர்களின் கோரிக்கையை வருகின்ற மாதம் முதல் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தவும் பரிந்துரை செய்தார்.

இதனால் தங்கள் கோரிக்கைகளை நிருவாகம் ஏற்க முயற்சி செய்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு தொழிலாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது அவருடன் பொன்னேரி தாசில்தார் ரஜினிகாந்த் உடன் இருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here