கும்பகோணம், செப். 19 –
கும்பகோணத்தில் சரவணன் (50) என்பவர் முன் விரோதம் காரணமாக முத்துமண்டபம் பகுதியில் வசித்து வரும் கௌதம் (22) என்பவரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து அவரது அலைபேசிக்கும், மற்றும் அவர் வசிக்கும் தெருவில் இருக்கும் பலருக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்ததுடன், மேலும், இந்த வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பதிவிடாமல் இருக்க பணம் கேட்டும் சரவணனும் அவருக்கு உதவியாக இருந்து செயல்பட்ட ஜோஸ்வா 22 என்ற நபரும் கௌதமை மிரட்டியுள்ளார். இதுக்குறித்து விசாரணை நடத்திய போலீசார் சரவணன் மற்றும் ஜோஸ்வாவை கைது செய்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகரை சேர்ந்தவர் கௌதம் (22) இவருக்கும், கும்பகோணம் செக்காங்கன்னி பகுதியை சேர்ந்த சரவணன் (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்,கௌதமை அவமானப்படுத்தி, பழிவாங்க எண்ணிய சரவணன், பழவாத்தான் கட்டளை விவேகானந்தர் நகரை சேர்ந்த ஜோஸ்வா (22) என்பவரின் உதவியோடு, கௌதமின் மனைவி புகைப்படத்தை வைத்து உருமாற்றம் செய்து அவர் ஆபாசமாக குளிப்பது போன்ற வீடியோ பதிவை கௌதமிற்கும், மற்றும் அவரது தெருவில் வசிக்கும் பலருக்கும் அனுப்பியதுடன், இதனை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டும், மிரட்டியுள்ளார்
இதனால் அதிர்ச்சியடைந்த கௌதம், இது குறித்து ஆதாரங்களுடன், நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அப்புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சரவணன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஜோஸ்வா ஆகிய இருவரையும், கைது செய்தனர். திருமணமான இளம்பெண்ணை முன்விரோதம் காரணமாக ஆபாசமாக சித்தரித்து வீடியோ பதிவை அலைபேசி வாயிலாக அனுப்பியதுடன், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டிய சம்பவம் பெரும் பரப்பையும், அதிர்ச்சியையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.



















