புதுச்சேரி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று கிராம பகுதிகளில் திருட்டு தனமாக அதிக விலைக்கு சாராய பாக்கெட் விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் நேற்று மதுக்கடைகள், கள்ளுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி கிராமப்பகுதி எல்லையான சேதராப்பட்டு பகுதியில் நேற்று திருட்டுத்மனமாக பாக்கெட் சாராயம் அதிக விலைக்கு விற்கப்பட்டது. அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் பாக்கெட் சாராயத்தை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
காவல் துறையினரும் இதை கண்டு கொள்ளவில்லை இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




















