திருவள்ளூர், மே. 06 –
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள பேரூர் நகர பொறுப்பாளர்கள் நியமனத்துக்கு உரிய அமைப்பு தேர்தல் நடத்த தலைமை கழகத்தின் ஆணையின்படி விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி 5. 6 .ஆகிய இரு தினங்களாக மாவட்ட அலுவலகம் டி ஜே எஸ் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழகதேர்தல் ஆணையாளருமான குத்தாலம் க.அன்பழகன் தலைமை வகித்து கழக அமைப்பு தேர்தலில் விருப்பம் தெரிவித்து போட்டியிடும் பொறுப்பாளர்களிடம் மனுவினை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராசஜன் மாநில தொழில் நுட்பப்பிரிவு அமைப்பாளர் சி.எச்.சேகர், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கே.வி.ஆனந்த் குமார், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பகலவன், கதிரவன், சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன்,மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் பழவை முகமது அலவி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி உள்ளிட்டவர்கள் உடனிருந்து சிறப்பித்தனர்.























