மீஞ்சூர், மே. 06 –
மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் 39-வது வணிகர் தின விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொது நல சங்கத்தின் சார்பாக 39-வது வணிகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி .ஷேக் அகமது தலைமையில் நிகழ்ச்சியின் துவக்கமாக மீஞ்சூர் பஜார் பகுதியில் சங்க கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினர். அதேபோன்று நாலூர். நந்தியம்பாக்கம். கவுண்டர் பாளையம் .உள்ளிட்ட இடங்களிலும் தங்க கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கியும் சிறப்பித்தனர். விழாவில் கவுண்டர் பாளையம் சீனிவாசன், ஏழுமலை, தாசப்பன், ஜெய்சங்கர், அப்துல் அஜீஸ், அயூப்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நாலூர் வட்டார வியாபாரிகள் பொதுநலசங்கம் சார்பில் சங்க கொடியினை வட்டாரத் தலைவர் ரகு ஏற்றி வைத்தார் .சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ஷேக் அகமது கலந்து கொண்டு இனிப்பு மற்றும் குளிர்பானங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் செயலாளர் அயூப்கான் .பொருளாளர் என்.ஆர். ரமேஷ்குமார் துணைத்தலைவர்கள் மூர்த்தி. சுரேஷ் .துளசிராமன் .சங்க காப்பாளர்கள் கண்ணபிரான். மனோஜ். துணை செயலாளர்கள் பாலாஜி .பாபு .சரவணன். டேவிட் ராஜ் .மற்றும் நாலூர் வட்டார வியாபாரிகள் பொது நல சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .





















