பெரியபாளையம், ஏப். 23 –

பெரியபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 21 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து  சென்றுள்ளனர். இக்கொள்ளைக் குறித்து மர்ம வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்,ஆர்.ஜி.என் நகரில் வசித்து வருபவர் பிரதீஷ்  (வயது36).  இவருக்கு சுவேதா என்ற மனைவியும், கிருஷிக் நரசிம்மா (வயது8), அத்விக்நரசிம்மா (வயது4) என்ற மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், பிரதீஷ் தனது மகன்களின் படிப்பிற்காக சென்னை அண்ணா நகரில் வீடு வாங்கி அங்கு வசித்து வருகிறார்.  இருப்பினும், பெரியபாளையம் பகுதியில் வீடு மற்றும் விவசாய நிலம் உள்ளதால் இந்த வீட்டில் தங்கி விவசாயம் மற்றும் தொழிலை கவனித்து வருகிறார்.  இந்நிலையில், பிரதீஷ் தனது நண்பர் அமர் என்பவருடன் கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் ஐதராபாத் சென்றிருந்தார்.  எனவே தனது வீட்டிற்கும்,  வீட்டுக் காவலுக்குள்ள மூன்று நாய்களை பராமரிக்கவும் இவரது கார் டிரைவர் ராமாபுரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பிரதீஷ் (வயது23) என்பவர் வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்,நேற்று காலை டிரைவர் பிரதீஷ் வீட்டிற்கு வந்தபோது மயங்கி விழுந்த மூன்று நாய்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரொக்க பணம், 21 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது குறித்து தனது முதலாளி பிரதீஷிக்கு டிரைவர் பிரதீஷ் தகவல் அளித்தார். பின்னர், இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் போலீசார் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here