திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சிறப்பு பிரிவு, காவல் நிலையங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களிலும், பல ஆண்டுகளாய் கழிவு செய்யப் படாத 12 டன் காகித ஆவணக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு புது பொலிவுடன் அலுவலகங்கள் காட்சியளிப்பதாக மாவட்ட காவல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருவள்ளூர்; அக்.3-
திருவள்ளூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள மாவட்ட காவல் அலுவலகம், சிறப்பு பிரிவு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்கள் ஆகியவற்றினை தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 150-வது பிறந்த நாளைப் போற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தின் பேரில் தூய்மை படுத்த உத்தேசிக்கப்பட்டு அனைத்து பிரிவு அலுவலகங்களில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் கழிவு செய்யப்படாமல் இருந்த அனைத்து வகையான முடிவுற்ற கோப்புகள் மற்றும் பதிவேடுகளினை கண்டறிந்து ப.அரவிந்தன் காவல் கண்காணிப்பாளர் திருவள்ளூர் மாவட்டம் அவர்களின் உத்திரவின் பேரில் 6 குழுக்கள் அமைக்கப்பெற்று சுமார் 12 டன் காகித கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதில் முதற்கட்டமாக 07 டன் காகித கழிவை கரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கு 02.10.2019 அன்று ஒப்படைத்து நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதின் விளைவாக திருவள்ளூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள மாவட்ட காவல் அலுவலகம், சிறப்பு பிரிவு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்கள் ஆகியன பழைய காகித கழிவுகள் ஏதுமின்றி புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.





















