ஆவடியில் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது

 ஆவடி; அக்.3-

ஆவடியில்  தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் முகமது இலியாஸ்  தலைமையில் மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் துணை ஆட்சியர் ராம் சீனிவாசன், மாநில தலைவர் டி. சி.ராஜேஷ், வழக்கறிஞர் அருள் முருகானந்தம் கலந்து கொண்டனர்.  

 

இந்நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ராம் சீனிவாசன் நிலப் பட்டாக்களின் வகைகள் மற்றும் அதை எப்படி விண்ணப்பித்து வாங்க வேண்டும் என்று பயிற்சி அளித்தார்.  மற்றும் அனைத்து  துறைகளிலும் அரசு அதிகாரிகள் கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுப்பார்கள் நீங்கள் தரகர்களிடம் அணுகி பெற வேண்டாம் நம் வாழ்க்கையில் முக்கியமானவை தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்று ஜாதி சான்று இவர்களுக்கு முறையான படி அனைத்து ஆவணங்களையும் இ- சேவை மையத்தில் கொடுத்தால் போதும் இ சேவை கட்டணம் ரூ.60 மட்டுமே மற்றும் முதியோர் உடல் ஊனமுற்றோர் கணவனால் கைவிட்ட பெண்கள் கணவனை இழந்த விதவைகள் இவர்களும் தாலுகா அலுவலகம் சென்று முறையான சான்றுகள் அளித்து அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் சரிபார்த்து உங்களுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசு உதவிகள் பெற வழி செய்வார்கள் என்றும் மற்றும் அரசு அதிகாரிகள் லஞ்ச கேட்டால் அதற்கு என்று விசாரிப்பதற்கு தனி அதிகாரிகள் உள்ளனர் என்றும்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசினார் இந் நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது ஆவடி பா.மணி கே.மாதவன் எம்.டி.சண்முகசுந்தரம், செல்வம் ஆர்.என்.வரதன், ஷேக் கலிமுல்லா மற்றும் அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here