கும்மிடிப்பூண்டி, மார்ச. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி
திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைந்துள்ள கே.எல்.கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992-1994 ஆம் ஆண்டு அறிவியல் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது,
அந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி அறிவினை புகற்றிய ஆசிரியர்களுடன் பழைய மாணவர்கள் உரையாடி மகிழ்ந்தனர் மேலும் அப்போது ஆசிரியர்களையும் அவர்கள் கௌரவப்படுத்தி அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
மேலும் அப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணாக்கர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் சேர் மேஜைகள் வாங்குவதற்காக நிதி உதவியும் வழங்கினார்கள்.
மேலும் அத்தினத்தை நினைவு கொள்ளும் வகையில் அப்பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கியும் அவர்களிடம் இருந்து வாழ்த்துகளை பெற்றனர். அம்மலரும் நினைவு நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்து உளம் மகிழ்ந்தனர்.





















