பொன்னேரி, ஏப். 25 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெத்தூர் கிராமத்தில்  அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு  ஶ்ரீவரமூர்த்தி விநாயகர் ஆலயம், எல்லையம்மன் ஆலயம், லட்சுமி நாராயணன் ஆலயம், மற்றும் கொம்மாத்தம்மன் ஆலயம். உள்ளிட்ட நான்கு ஆலயத்திலும் இன்று ஒரே தினத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பட்டாச்சாரியர்கள் வேதங்கள் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில்லிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களின் மீது பட்டாச்சாரியார்கள் ஊற்றிய போது சுற்று வட்டாரங்களில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கடவுளின் பெயர்களை உச்சரித்தவாறு சுவாமியை தரிசித்தனர்.

மேலும் பக்த கோடிகளூக்கு நிர்வாகத்தின் சார்பிலும் வேண்டுதலின் அடிப்படையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கிராமத்தில் ஒரே தினத்தில் நான்கு கோவில்களுக்கும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here