மீஞ்சூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் ஓம் மக மாயா சக்தி பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் அமைந்துள்ள சித்தர் பீடம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது,
அவ்விழாவில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மஞ்சள் நிற உடை அணிந்து விரதம் இருந்து பால் குடங்களை தலையில் சுமந்தவாறும், உடலில் அலகு குத்தியும் வர அவ் ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க புதுநகர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக ஓம்சக்தி பராசக்தி என்ற கோஷங்களை எழுப்பியவாறு வலம் வந்து ஓம் மக மாயா சக்தி கோவிலடைந்தது. தொடர்ந்து அவர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி மனமுருகி பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டனர்.
சித்ரா பௌர்ணமி பால்குட விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஓம் மக மாயா சக்தி கோவில் டிரஸ்ட் சிதம்பரம் நடராஜர் ஐயா குடும்பத்தினர் செய்திருந்தனர், அதில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.ஜி.சுகந்தி வடிவேல், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், திரைப்பட தயாரிப்பாளர் செல்வம், சாண்டி செல்வராஜ், தலைவர் சாண்டி, முத்தாரம்மன் கோவில் டிரஸ்ட் மற்றும் கிராம நிர்வாகிகள், மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.























