பொன்னேரி, ஏப். 04 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வஞ்சிவாக்கம் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராமத்து மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வாணிஸ்ரீ ராஜேஷ் இது குறித்து மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவியிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஒன்றிய பெருந்தலைவர் அருகிலுள்ள அதானி போர்ட் நிறுவன உதவியுடன் கிராம வளர்ச்சி நிதியின் அடிப்படையில் ரூபாய் 9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்தார்.

அது மக்களின் பயன்பாட்டிற்கு நேற்று அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வாணிஸ்ரீ ராஜேஷ் தலைமை வகித்தார். மிஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி. மீஞ்சூர் மேற்கு ஒன்றிய கழக திமுக செயலாளர் சுகுமாரன். உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்  துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் விநியோகத்தை வழங்கினார்.

இவ்விழாவில் வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஊராட்சி செயலர் பாபு உள்ளிட்ட திரளான கட்சியினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here